பெண்கள் தங்கள் வீட்டில் தனித்திருக்கும்போது அன்னிய ஆண் எவரும் இல்லாத நிலையில்,தலையை முழுமையான மறைக்க வேண்டுமா?

 


பெண்கள் தங்கள் வீட்டில் தனித்திருக்கும்போது அன்னிய ஆண் எவரும் இல்லாத நிலையில்,தலையை முழுமையான மறைக்க வேண்டுமா?

பங்கு சத்தம் கேட்டாலும்,உணவு உண்ணும்போதும் சிலர் முக்காடு இடுகின்றனர்.,இது இஸ்லாம் கூறி இருக்கும் கடமையா? திக்ரு,துஆவின்போதோ,குரான் ஓதும்போதோ,உளூ செய்தும்போதோ கட்டாயம் பெண்கள் தலைமுடியை மறைக்க வேண்டுமா?


🌷பதில்🌷


இஸ்லாம் தலைமுடியை மறைக்க சொன்னது,இரண்டு விஷயங்களுக்குத்தான்.


1) தொழுகையின்போது

2) அந்நிய ஆண்கள் இருக்கும்போது


இதை தவிர்த்து எந்த ஒரு விஷயங்களுக்கும் தலை முடியை மறைக்க

தேவையில்லை.


மஹ்ரமான ஆண்கள் தவிர்த்து வீட்டில் வேறு ஆண்கள் இருக்கும் சமயத்தில் சாப்பிடும்போதும்,ஓதும்போதும்,பாங்கு சொல்லும்போதும் மற்றும் மறைக்கவேண்டிய எல்லா நிலைகலிலும் தலை முடியை மறைப்பது கட்டாயம்.

(இது இந்த செயலுக்காக அல்ல,மஹ்ரமில்லாத ஆண்கள் உடனிருப்பதால்)


ஆனால்,தனித்திருக்கும் போது கட்டாயம் கிடையாது.,



📘”பருவமான பெண்கள் தலை, பிடறியை மறைத்தால் தவிர அவர்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (நூற்கள்: ,அஹ்மது, அபூ தாவூது, நஸயீ, இப்னுமாஜா, திர்மதி)


📘

وَقُل لِّلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا ۖ وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَىٰ جُيُوبِهِنَّ ۖ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ أَوْ آبَائِهِنَّ أَوْ آبَاءِ بُعُولَتِهِنَّ أَوْ أَبْنَائِهِنَّ أَوْ أَبْنَاءِ بُعُولَتِهِنَّ أَوْ إِخْوَانِهِنَّ أَوْ بَنِي إِخْوَانِهِنَّ أَوْ بَنِي أَخَوَاتِهِنَّ أَوْ نِسَائِهِنَّ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُنَّ أَوِ التَّابِعِينَ غَيْرِ أُولِي الْإِرْبَةِ مِنَ الرِّجَالِ أَوِ الطِّفْلِ الَّذِينَ لَمْ يَظْهَرُوا عَلَىٰ عَوْرَاتِ النِّسَاءِ ۖ وَلَا يَضْرِبْنَ بِأَرْجُلِهِنَّ لِيُعْلَمَ مَا يُخْفِينَ مِن زِينَتِهِنَّ ۚ وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَ الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ  ﴿24:31﴾

24:31. இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது; மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள்கால்களை தட்டிநடக்கவேண்டாம்,மேலும்,மூஃமீன்களே!(இதில் ஏதேனும் தவறு நேர்ந்திருப்பின்)நீங்கள் தவ்பா செய்து,நீங்கள் வெற்றி பெரும் பொருட்டு,நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.


Comments